வியாழன், 6 டிசம்பர், 2018

தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்


தலை வலி வர பல காரணங்கள் உள்ளன. ஜலதோஷம் காரணமாக தலை வலி ஏற்படலாம், சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் மூலம் தலைவலி ஏற்படலாம், அதிக கோவம் கொண்டால் தலை வலி ஏற்படலாம், அதிக சத்தம் உள்ள இடத்தில இருந்தால் தலை வலி ஏற்படலாம். இப்படி தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தலை வலி நீங்க சித்த மருத்துவம் கூற சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 :
துளசி, சுக்கு போன்றவை இயற்க்கை நமக்கு தந்த வரப்ரசாத மூலிகைகள். இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம். துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.


குறிப்பு 2 :
சிலருக்கு உடல் உஷ்ணத்தால் கூட தலைவரை ஏற்படும். அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் சூட்டல் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.


குறிப்பு 3 :
பால், இஞ்சி சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் கலந்து சூடு செய்து தலைக்கு தடவி ஒரு ஐந்து நிமிந்து நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் தலை வலி நீங்கும். நீண்ட காலம் தலை வலி உள்ளவர்கள் இதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வரலாம்.


குறிப்பு 4 :
பலரை ஒற்றை தலைவலி நெடு நாட்களாக வாட்டி வதைக்கும். அவர்களுக்கான ஒரு எளிய தீர்வு என்னவென்றால் ஒரு துண்டை எடுத்து அதை பச்சை தண்ணீரில் நனைத்து தலை மற்றும் கழுத்து பகுதியில் கட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு கை மற்றும் கால்களை அதில் விடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி நீங்கும்.


குறிப்பு 5 :
நொச்சி இலை சாறு தலைவலியை போக்கக்கூடியது. ஆகையால் நொச்சி இலையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதை நெற்றியின் இருபுறம் மட்டும் தடவினால் தலைவலி நீங்கும்.

குறிப்பு 6 :
சூரிய உதயம் ஆகும் சமயத்தில் எருமை பாலேடு வெள்ளை எள்ளை சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு சூரிய ஒளியில் காட்டினால் தலைவலி நீங்கும்.


குறிப்பு 7 :
வில்வ இலைக்கு நீண்ட நாள் தலைவலியை குணமாக்கி மருத்துவ குணம் உண்டு. வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருவது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த தலைவலி நீங்கும்.
மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தலைவலியை எளிதில் குனிமாக்கலாம். வேறு சில நோய்களால் தலைவலி ஏற்பட்டாலோ அல்லது தலைவலியோடு சேர்ந்து வாந்தியும் இருந்தாலோ மருத்துவரை அணுகுவதே சிறந்தது.





ஞாயிறு, 15 மே, 2016

துளசியின் பயன்கள்

துளசியின் பயன்கள்


* இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.
* துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.
* நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
* மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.
* இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.
* கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.
* ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.
* வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.
*துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
#குழந்தைகளுக்கான
மார்புச்சளிநீங்க
துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும்.
மார்புச்சளி வெளியேறும்.
*துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.
#பெண்களுக்கு
துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.
#ரத்தஅழுத்தம்குறைய
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
#உடல்எடைகுறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.
அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
துளசி இலை - 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் - 5 கிராம்
கீழாநெல்லி - 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு - 3
எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.
#தொண்டைக்கம்மல்,வலி நீங்க
தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.
10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.
#சிறுநீரகக்கல்நீங்க
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
மேலும் நல்லபல மருத்துவ செய்திகளை அறிந்துகொள்ள.